vendredi 25 janvier 2008

அசின்

எப்பிடி இருந்தவள் .....



இப்படி ஆகிட்டாலே ...


ஏஏ ... அசினின் ரசிகர்மார்கள் என்னை மனிபார்களொ தெரியவில்லை ...

தாஜ் மகால் 2

தாஜ் மகால் 1 - கருப்பு வெள்ளை

எனது சில சித்திர முயற்சிகளை இங்கே போடுகின்ரேன் ... பெரிதாக ஒன்டும் இல்லை ... சகித்து கொல்ல கூடிய மாதிரி இருக்குதா என்டு பார்த்து சொல்லுங்கள் ...

dimanche 20 janvier 2008

இளம் தமிழ் கலைஞர் சங்கம் ... (திட்டம்)


எனது ஓர் சிறிய ஆசையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன் ....

வெளி நாடுகளில் வாழும் தமிழ் கலைஞர்களை ஊக்குவிப்பதற்க்காக ஓர் சங்கம் போல் ஒன்றைத் துவங்க வேண்டும் என்று எனக்கு பல நாட்களாக ஆசை ...

முக்கியமாக அவர்களின் திறமைகளை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் ... இல்லை என்றால் பல திறமை உள்ள கலைஞர்கள் அவர் அவர் துறையை விட்டு விலகி விடுவார்கள் ...

இப்படி இப்போதைக்கு ஒரு திட்டம் மட்டும் தான் இருக்கு .... இது எந்த அளவுக்கு நிஜம் ஆகும் என்று பாற்ப்பொம் ... அதாவது உங்கள் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்குது என்று பார்ப்போம் ...

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்த படி ....

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர் 2 (தொடரும்)


நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது





எல்லா தெய்வங்களும்
தங்களைக் குளிப்பாட்டிவிட
பூசாரி வைத்திருக்கும்போது
நீ மட்டும் ஏன்
நீயே குளித்துக்கொள்கிறாய்?





மழை வந்து
நின்ற பிறகும்
செடிகள் வைத்திருக்கும்
மழைத்துளிகளைப் போல
என் அறை வைத்திருக்கிறது
நீ வந்து போன பிறகும்
உன்னை.




புத்தர் இந்த உலகத்தில்
தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்தாய்.


அன்று
நீ குடை விரித்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
நின்றுவிட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை நின்றால்
நீ எங்கோ குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.



உன்னைப் பார்த்தால்
எடை பார்க்கும் இயந்திரம்கூட
கவிதை எழுத
ஆரம்பித்துவிடும் போல.
உன் எடையை அடிக்கவேண்டிய
இடத்தில்
'அழகு நீங்களாக 50 கிலோ' என்று
அடித்திருப்பதைப் பார்!



'அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராது' என்றேன்.
அர்த்தம் புரியாமல்
'ஏன்' என்றாய்.
'உங்கள் வீட்டில்தான்
எப்போதும் பெளர்ணமியாக
நீ இருக்கிறாயே' என்றேன்.
'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று
நீ ஆரம்பித்தாய்
வெட்கப்பட...



கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்திவிட்டன

கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே
விட்டோமா
நிலவை!' என்று.





உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்...எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்...எனக்கா இந்தச் சிலை'
என்று கத்தியது.





இந்தா என் இதயம்.
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்
தூக்கிப் போட்டுவிடு.
அது அதற்குத்தான்
படைக்கப்பட்டது!

samedi 19 janvier 2008

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர் 1 (தொடரும்)

அற்புதமான வரிகள் ...




நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது





நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.



முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.

நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்




உன் பெயரில் உள்ள
இரண்டு எழுத்துக்களைத் தவிர
தமிழில் மிச்சமுள்ள
245 எழுத்துக்களும்
தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்
இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




சிந்திய மழை
மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால்,
ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறதே.



'நிலா ஏன்
தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'
நீ அடிக்கடி
'நேரமாயிடுச்சு போகணும்' என்று
உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா
அதனால்தான்.





தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியன் போல
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி சய்கிறாய்.







காற்றோடு விளையாடிக்
கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை
இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.




தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்'
சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு'
என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம்
பிடிக்கிறதே.




என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டு முன் நின்று
'இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது'
என்று கத்திவிட்டு

குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

காதல் சுவடு

என் நிலமையும் கிட்டத் தட்ட இப்படித் தான் போகுது... எங்க போய் முடியுமோ தெரியல ... அதையும் பார்ப்போம் ...
கவிதை போன்ற ஓர் குறும்படம் ...