samedi 19 janvier 2008

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர் 1 (தொடரும்)

அற்புதமான வரிகள் ...




நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது





நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.



முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.

நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்




உன் பெயரில் உள்ள
இரண்டு எழுத்துக்களைத் தவிர
தமிழில் மிச்சமுள்ள
245 எழுத்துக்களும்
தினமும் புலம்புகின்றன.

'உனக்கு யார்
இரண்டெழுத்தில் பெயர் வைத்தது' என்று.




சிந்திய மழை
மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால்,
ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறதே.



'நிலா ஏன்
தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'
நீ அடிக்கடி
'நேரமாயிடுச்சு போகணும்' என்று
உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா
அதனால்தான்.





தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியன் போல
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையைச் சரி சய்கிறாய்.







காற்றோடு விளையாடிக்
கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை
இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.




தொலைபேசியில்
நீ எனக்குத்தானே 'குட்நைட்'
சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு'
என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம்
பிடிக்கிறதே.




என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டு முன் நின்று
'இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது'
என்று கத்திவிட்டு

குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

Aucun commentaire: