dimanche 20 janvier 2008

தேவதைகளின் தேவதை - தபூ சங்கர் 2 (தொடரும்)


நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது





எல்லா தெய்வங்களும்
தங்களைக் குளிப்பாட்டிவிட
பூசாரி வைத்திருக்கும்போது
நீ மட்டும் ஏன்
நீயே குளித்துக்கொள்கிறாய்?





மழை வந்து
நின்ற பிறகும்
செடிகள் வைத்திருக்கும்
மழைத்துளிகளைப் போல
என் அறை வைத்திருக்கிறது
நீ வந்து போன பிறகும்
உன்னை.




புத்தர் இந்த உலகத்தில்
தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்தாய்.


அன்று
நீ குடை விரித்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
நின்றுவிட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை நின்றால்
நீ எங்கோ குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.



உன்னைப் பார்த்தால்
எடை பார்க்கும் இயந்திரம்கூட
கவிதை எழுத
ஆரம்பித்துவிடும் போல.
உன் எடையை அடிக்கவேண்டிய
இடத்தில்
'அழகு நீங்களாக 50 கிலோ' என்று
அடித்திருப்பதைப் பார்!



'அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்குத் தீபாவளி
வரவே வராது' என்றேன்.
அர்த்தம் புரியாமல்
'ஏன்' என்றாய்.
'உங்கள் வீட்டில்தான்
எப்போதும் பெளர்ணமியாக
நீ இருக்கிறாயே' என்றேன்.
'ஆரம்பிச்சிட்டீங்களா' என்று
நீ ஆரம்பித்தாய்
வெட்கப்பட...



கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்திவிட்டன

கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே
விட்டோமா
நிலவை!' என்று.





உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்...எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்...எனக்கா இந்தச் சிலை'
என்று கத்தியது.





இந்தா என் இதயம்.
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்
தூக்கிப் போட்டுவிடு.
அது அதற்குத்தான்
படைக்கப்பட்டது!

2 commentaires:

தயா a dit…

தபு சங்கர் : இணையத்தளத்தில் இவருடைய கவிதைகளைப் படித்திருக்கிறேன், அழகான கவிதைகள்... கற்பனையில் வழ்பவரோ...

just mad a dit…

Salut,

Beautiful. I simply loved them. :)

Merci